Wednesday, 30 April 2014

"யின் -யாங்" - தத்துவம்

நமது சிவ-சக்தி தத்துவத்தை  அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டது தான்  சீன "யின் -யாங்"  (yin-yang)-தத்துவம்   எனலாம்.  "யின்" என்பது நமது உடலில் அமைந்துள்ள நெகட்டிவ் (-ve) எனப்படும்  "எதிர்மறை சக்தி" மற்றும் "யாங்" என்பது நமது உடலில் அமைந்துள்ள பாசிடிவ் (+ve) எனப்படும் "நேர்மறை சக்தி" ஆகும். "யின் -யாங்" இவ்விரண்டின் நுண்ணியமான  "சேர்ந்து இயங்கும்" தன்மைதான்   நமது உடல் ஆரோக்கியத்தின் அடிப்படையாக செயல்படுகிறது.

யின்-யாங் செயல்பாட்டின் ஒத்திசைவு கெடுமானால், நமது உடலில் இயங்கிக்கொண்டிருக்கும் பஞ்சபூத சக்திகளின் செயல்பாடு பாதிக்கப்பட்டு,  நமது உயிர் சக்தி ஒட்டப்பாதையில் தடைகள்  ஏற்பட்டு உடல்  நலக்குறைவு உண்டாகிறது.

அக்குபஞ்சர் சிகிச்சை மூலம் பஞ்சபூத சக்திகளின் செயல்பாடு சரிசெய்யப்பட்டு சக்தி ஒட்டப்பதைகளில் ஏற்பட்டுள்ள தடை அகற்றப்படுவதன் மூலம் யின்-யாங் ஒத்திசைவு பாதுகாக்கப்பட்டு, உடல் நலம்  சீராகிறது.

"உடல் நலக்குறைவு" என நாம் கருதும் பல குறிகள், நமது உடலினுள் "யின்-யாங்"   இணைந்து நடத்தும்   போராட்டத்தின் விளைவே தவிர, அவை நோயல்ல. இதனை தனிப் பதிவாக பார்ப்போம்.யின்-யாங் குணங்கள்:

       யின்                  -            யாங்

நெகட்டிவ்                  -   பாசிடிவ்
பெண் தன்மை         -     ஆண் தன்மை
கெட்டியானது         -    பை போன்று குழிவானது
குளிர்                           -   வெப்பம் 
இருட்டு                      -    வெளிச்சம்
கருப்பு                         -    வெள்ளை
மந்தம்                         -    சுறுசுறுப்பு
இடது                           -    வலது


யின்-யாங் செயல் தன்மைகள்


இரவில்லாமல் பகலில்லை - பகலில்லாமல் இரவில்லை; வெளிச்ச மில்லாமல்  இருட்டில்லை- இருட்டில்லாமல் வெளிச்சமில்லை. அதுபோல்  "யின்" மட்டும் தனியாகவோ அல்லது "யாங்" மட்டும் முழுவதும் தனியாக இருப்பதுமில்லை - இயங்குவதுமில்லை.
எந்த ஒரு "யின்"னும் சிறிதளவாவது "யாங்" இல்லாமல் இருப்பதுமில்லை - அதேபோல் எந்த ஒரு "யாங்"கும் சிறிதளவாவது "யின்" இல்லாமல் இருப்பதுமில்லை.

இரண்டும் எப்போதும் "சம அளவு"  "நிலையாக" இருப்பதில்லை.காலை, பகல், மாலை, இரவு, மற்றும் உடலின் செயலாக்கம் - இவற்றுக்கேற்ப அளவு மாறிக்கொண்டே இருக்கும்.

இரண்டும் ஒன்றுக்கொன்று எதிராக - ஆனால் ஆதரவு தரும் வகையில் செயல்படுகின்றன.

ஒன்றின் இயக்கம் அதிகமாகும் போதோ அல்லது குறையும் போதோ-  மற்றொன்றின்  இயக்கம் அதை நிலைப்படுத்தும் வகையில், பூர்த்தி செய்யத்தக்கதாக இருக்கும்.

உடல் நலத்தை நிலைப்படுத்தும் ஒரே குறிக்கோளுடன் எப்போதும் இயங்கிக்கொண்டிருக்கும்.

"யின்- யாங்" தத்துவம்  - ஒரு சாகச வித்தை
 

ஒரு எளிதான உதாரணம், "யின்-யாங்"கின் இயக்கத்தினை தெளிவுறச்செய்யும் முயற்சியாக தருகிறேன். எந்தவித பிடிமானமும் இல்லாமல் ஒருவர் கம்பியின் மீது நடக்கும் சாகசச்செயலை நினைவிற்குக் கொண்டு வாருங்கள். அவர் நடக்கையில், சமநிலை பாதிக்கப்படும்போது, புவிஈர்ப்பு விசையினை சரிப்படுத்த அவர் எடுக்கும் முயற்சியை நினைவுகூருங்கள்.

இடப்பக்கம் சாய நேரும்போது, வலப்பக்கம் சற்று உடலை வளைத்து, கூடவே வலது காலினை சற்று உயர்த்தி, கம்பிக்கு  வலது பக்கமாக எடையை கூட்டும் முயற்சியில் ஈடுபட்டு, உடல் சம நிலைப்படும் அதேகணமே, வலது காலை இறக்கி புவி ஈர்ப்பை சமணம் செய்கிறார். சிறிது கூட இடைவெளி இல்லாமல் நடைப்பயணம் முடியும் வரை அவரது இட-வலது போராட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும் - ஒருவரின் வாழ்க்கை முழுவதும் அவரது உயிரை காப்பாற்றும் முயற்சியாக அவரது  'யின்-யாங்" நடத்தும் போராட்டத்தைப் போலவே.

    

                                                 "வருமுன் காப்போம்"


2 comments:

 1. I read the writeup first time today.

  Your writings are good. In particular, the subject matter you are touching is unique and highly useful to the readers. I wish you all the best, and I encourage you to keep it up.

  By the by, I would like to make a few suggestions regarding the writing in the blogs.
  i) I recommend to use a fine-looking Tamil font.
  ii) Proofreading is very much necessary, to avoid typographical errors and language-related errors (such as ஓர் எளிய instead of ஒரு எளிய, வல்லினம் மிகுதல் etc).
  iii) I would like to avoid non-Tamil terms such as உதாரணம், பூர்த்தி etc. to the possible extent.

  Best regards.

  Ramamurthy B
  +91 96265 70725

  ReplyDelete
 2. நண்பர் திரு. ராமமூர்த்தி அவர்களே,
  தங்களின் ஊக்கம் தரும் வார்த்தைகள், தொடர்ந்து எழுதுவதற்கு மிகவும் உற்சாகம் தருகின்றன. தங்கள் ஆலோசனைப்படி, எழுத்தின் உருவம், இலக்கணம் மற்றும் தூய தமிழ் வார்த்தைகள் பயன்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறேன்.

  மிகுந்த நன்றி கலந்த அன்புடன்
  - ஸ்டாலின் இரத்னசாமி

  ReplyDelete