அண்டமும் பிண்டமும் ஒன்றே
ஆகாயம், நெருப்பு, நிலம், காற்று, நீர் - ஆகிய பஞ்சபூதங்கள்தான் "அண்டம்" (GALAXY-MACROCOSM) எனப்படும் பிரபஞ்சத்தின் அணுக்கூறுகள் ஆகும். "அண்டமும் பிண்டமும் ஒன்றே" - என்ற வகையில், அண்டத்தின் ஒரு துகளாகிய பூமியாகிய உலகமும், உலகத்தின் ஓர் அங்கமாகிய, மனிதராகிய (HUMAN-MICROCOSM) நாமும் அதே ஐந்து மூலக்கூறுகளால் உருவாக்கப் பட்டவர்கள்தாம்.
ஐந்து மூலகங்களும் ஒன்றிணைந்து செயல்பட்டு, ஒரு முழுமையான சக்தியாக - நமது பிரபஞ்சம், உலகம், நமது உடல் ஆகியவற்றில் "உயிர் சக்தி" யாக ஓடி இயக்கிக்கொண்டிருக்கிறது.
சீன அக்குபஞ்சரில், பஞ்ச பூதங்களில், "ஆகாயம்" மூலகத்தை "மரம்" என்றும் "காற்று" மூலகத்தை "உலோகம்" என்றும் உருவகப்படுத்தியுள்ளார்கள்.
எனவே,
மரம் (Wood)
நெருப்பு (Fire)
நிலம் (Earth)
உலோகம் (Metal)
நீர் (Water)
ஆகிய ஐந்தும் நம்மை இயக்கிக்கொண்டிருக்கும் "பஞ்சபூதங்கள்" அல்லது "ஐந்து மூலகங்கள்" ஆகும்.
நமது உடலின் உயிர்சக்தி நிலைத்திருக்கும் வண்ணம் செயல்படும் பன்னிரண்டு பிரதான உள்ளுறுப்புகள், அவற்றின் இயல்பினை கருத்தில் கொண்டு, பஞ்சபூதங்களின் தன்மை கொண்டதாக வகைப்படுத்தப் பட்டிருக்கின்றன.
யின்-யாங் தத்துவப்படி, ஒவ்வொரு மூலகத்திலும் ஒரு யின் மற்றும் ஒரு யாங் உறுப்பு உண்டு. யின்-யாங் உறுப்புகள் "சாங்க் - ஃபூ" - (ZANG-FU) உறுப்புகள் எனவும் சொல்லப்படும்

"நெருப்பு" மூலகத்தில் மட்டும் இரண்டு ஜோடி உறுப்புகள் அமைகின்றன.
"இருதயம்" மற்றும் அதன் இணை உறுப்பான "சிறுகுடல்" ஜோடியினை "பெரிய நெருப்பு" - BIG FIRE - எனவும், "இருதய மேலுறை" மற்றும் அதன் இணை உறுப்பான "மூவெப்பமண்டலம்" ஜோடியினை "சிறிய நெருப்பு" - SMALL FIRE - எனவும் நாம் பிரித்தறிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment