உணவுக்குழாய்
நாம் உண்ணும் உணவு, தொண்டையின் அடிப்பாகத்தில் ஆரம்பிக்கும் உணவுக்குழாயின் அலை அலையாக இயங்கும் தன்மையால் (peristatic movement) வயிற்றுக்குள் அனுப்பப்படுகிறது.
இரைப்பையின் ஆரம்பமாக அமைந்துள்ள "கார்டியாக் ஸ்பிங்க்டர்" (cardiac sphincter) எனும் சுருக்கு தசை துளையில் முடிவடையும் உணவுக்குழாயின் நீளம் சுமார் 25 செ. மீட்டர்.
உணவு அருந்தாத நிலையில் ஓய்வாக இருக்கும் உணவுக்குழாய், உணவின் வருகையால் தூண்டப்பட்டு, மேலிருந்து கீழாக, ஒரே சீராக, அலை அலையாக சுருங்கி விரியும் தன்மையால், உணவினை வயிற்றுக்கு கொண்டு செல்கிறது.
இந்த இயக்கம் எளிதாக நடைபெற, உணவுக்குழாயின் உட்புறத்தில் சுரக்கும், "ம்யூகஸ்" என்னும் சளித்திரவம் துணை புரிகின்றது.
விக்கல்
நாக்கினால் தொண்டைக்குள் அனுப்பப்படும் உணவு, உணவுக்குழாயினுள் நுழைந்த மறுகணம் ஏற்படும் தொந்திரவில் ஒன்று விக்கல். விக்கலுக்கு பல காரணங்கள் இருந்தாலும், ஜீரண மண்டலம் சம்பந்தமான ஒன்றை மட்டும் நாம் இங்கே பார்ப்போம்.
தொண்டையில், குரல்வளைப்பகுதியில் - மூச்சுக்குழலும், உணவுக்குழலும் பிரியும் இடத்தில், மூச்சுக்குழலுக்குள் உணவுத்துகள்கள் சென்றுவிடாமல் தேவைக்குத் தகுந்தாற்போல் திறந்து மூடும் தானியங்கி அமைப்பு "எபிகிளாடிஸ்" எனப்படும்.
நெஞ்சறை, மற்றும் வயிற்றறை - இரண்டையும் பிரிக்கும் தசைத்தட்டு "உதரவிதானம்" எனப்படுகிறது.
உணவு அருந்தும்போதும், நமது மூச்சு சீராக இயங்கிக் கொண்டுதான் இருக்கும். சுவாசம் சீராக நடைபெற, நுரையீரல் சுருங்கி விரியும் வண்ணம் உதரவிதானம் ஏறி - இறங்கி செயல்பட்டுக்கொண்டிருக்கும்.
உணவினை நன்றாக மென்று, நிதானமாக விழுங்கும்போது ""எபிகிளாடிஸ்" செய்யும் பணிக்கு எந்தவித தொந்தரவும் இல்லை.
உணவினை சரியாக மெல்லாமல், உமிழ்நீர் கலக்காமல், அவசர அவசரமாக அல்லது பெரிய கவளமாக விழுங்கும்போது, குரல்வளையின் இயல்பான தானியங்கிச் செயல்பாடு சற்றே குளறுபடியாக நிகழும்
இந்நிலையில், மூச்சுக்குழலினுள் உணவு சென்று விடாமல் பாதுகாக்கும் "அனிச்சை செயலாக" எபிகிளாடிஸ் மூடிக்கொள்கிறது.
மூடிக்கொள்ளும் அதே வேளையில், உதரவிதானமானது - மூச்சை உள்ளிளுக்க வேண்டி, நுரையீரலை விரியச்செய்யும் முயற்சியாக - கீழிறங்க முற்பட - எபிகிளாடிஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றுத்தடையினால் விக்கல் சப்தம் எழுகிறது.
இந்த விக்கல் ஆபத்தானதா? இந்த விக்கலை எவ்வாறு நிறுத்துவது?
மேற்சொன்ன காரணத்தினால் ஏற்படும் விக்கல் - மூச்சை சற்று நிதானப்படுத்தி விடச் செய்தாலே நின்று விடும்.
தண்ணீர் அருந்தினால் நின்று விடுகிறதே? அது எப்படி?
தண்ணீர் அருந்தும் வேளையில், மூச்சு நிதானப்படுகிறது என்பதுதான் அங்கே உண்மை.
அதிர்ச்சி தரும் சிறு பயமுறுத்தல் கூட, மூச்சினை சற்று நிறுத்தி, நிதானப்படுத்துவதால், விக்கல் நின்றுவிட ஏதுவாகிறது.
எந்தவித விக்கலானலும் - இரண்டு அல்லது மூன்று அக்குபஞ்சர் புள்ளிகளை தூண்டுவதன்மூலம் நிறுத்திவிட அதிக வாய்ப்பு உள்ளது.
உணவை நன்றாக மென்று, நிதானமாக விழுங்கும்போது விக்கல் ஏன் வருகிறது?
வருமுன் காப்போம்.
நெஞ்செரிச்சல் - முற்றினால் - ஹையாடல் ஹெர்னியா
உணவுக்குழாயும் இரைப்பையும் சந்திக்கும் இடத்தில் உள்ளது "கார்டியாக் ஸ்பிங்க்டர்" அல்லது "LES" எனப்படும் "Lower Esophageal Sphincter ".
உணவுக்குழாயின் இயக்கம், மேலிருந்து கீழாக, ஒருவழிப்பாதையாகவே நடைபெறுகிறது; என்றாலும் சில நேரங்களில், நாம் செய்யும் தவறுகளால் - அத்துமீறல் நடைபெற ஏதுவாகிறது.
அரைகுறையாக அரைக்கப்பட்ட உணவு, உணவுக்குழாயில் மேலேற எத்தனிக்கிறது - மேலேறவும் செய்கிறது.
மேலேறிய அரைகுறையாக அரைக்கப்பட்ட உணவு, அமிலக் கலப்புடன் கூடியது என்பதில் சந்தேகமில்லை.
இரைப்பையில் சுரக்கும் அமிலத்தை தாங்கிக்கொள்ளும் சக்தி இரைப்பைக்கு உண்டு. ஆனால் உணவுக் குழாயின் உட்புறச்சுவரானது அமிலத்தை பொறுத்துக்கொள்ளும் அளவுக்கு உறுதி வாய்ந்தது அல்ல.
அதன் மெல்லிய தசைச்சுவற்றின் உட்புற சளிச்சவ்வுப்படலம் அமிலத்தை தாங்கிக்கொள்ள இயலாமல், பாதிப்படைகிறது. அந்த பாதிப்பு நெஞ்செரிச்சலாக உணரப்படுகிறது.
ஒருவருக்கு அடிக்கடி நெஞ்செரிச்சல் ஏற்படுமேயனால், உணவுக்குழாயின் கீழ்பகுதியான "L E S " பகுதியில் தசை சுவர்கள் பலமிழந்து, தளர்ந்த நிலையில் வீக்கம் ஏற்பட்டு, முற்றுகிறது.
இந்நிலை "ஹயாடல் ஹெர்னியா" என்று சொல்லப்படுகிறது. இந்நிலையினை அடைந்தோருக்கு, மேலும் மேலும் பிரச்சினை முற்றுமானால் அந்த இடத்தில் "கேன்சர்" உருவாகவும் வாய்ப்பு உண்டு
ஆரம்ப நிலையிலேயே நெஞ்செரிச்சலை குணப்படுத்த அக்குபஞ்சர் மிகவும் பயன்படும்.
வருமுன் காப்போம்
No comments:
Post a Comment